இலங்கை யுவதிக்கு லண்டனில் கிடைத்த சர்வதேச விருது

ekuruvi-aiya8-X3

krystle_reid-600x3332017ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய அமைப்பின் இளம் ஆளுமையாளராக இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவர் விருது பெற்றுள்ளார்.

கிறிஸ்டல் ரீன் என்ற யுவதி விருது வென்றுள்ளார்.

மாற்றத் திறனாளிகளுக்கு உதவும் எனேபெல் லங்கா அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரான, இவர் இளம் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கி சுபீட்சமான வாழ்வை முன்னெடுப்பதற்கான உதவிகளையும் வழங்கி வருகிறார்.

தேர்தல் செயற்பாடுகளில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பதிலும் இவர் ஆர்வமூட்டி வருகிறார்.

தமது அமைப்பு மேற்கொள்ளும் பணிகளுக்கு கிடைத்த பாராட்டையே இந்த தெரிவு குறிப்பதாக கிறிஸ்டல் ரீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய அமைப்பின் பெரும்பாலான வளங்களை பயன்படுத்தி கூடுதலான மாற்றுத் திறனாளிகளுக்கு விரிவாக சேவைகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

பொதுநலவாய அமைப்பின் விசேட அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு குறைந்த இளைஞர் யுவதிகளுக்கு இதில் இணைந்து கொள்ளலாம்.

வறுமை ஒழிப்பு, சமாதானம் போன்ற இலக்குகளை வெற்றிகரமாக அடைந்து கொள்வோரை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment