லண்டனில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

AR-Rahman-லண்டனில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க தமிழ்பாடல்கள் பாடப்பட்டதால் வட இந்திய ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

லண்டனில் உள்ள வெம்ப்லே பகுதியில் கடந்த 8-ஆம் திகதி, தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க தமிழ்பாடல்கள் பாடப்படும் இந்நிகழ்ச்சிக்கு “நேற்று இன்று நாளை” என்று பெயரிடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்பாடல்கள் மட்டுமே பாடப்படும் என்பதை அறியாத பல வட இந்தியர்களும் ஆர்வத்தோடு நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.

நிகழ்ச்சி முழுவதும், ஏ.ஆர். ரஹ்மான் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடியதால், வட இந்தியர்கள் கடுப்பாகி பாதியிலேயே வெளியேறினர். இதுதொடர்பாக, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமுக வலைதளங்களில் வடஇந்திய ரசிகர்கள் தங்களது அதிருப்தியை பதிவுசெய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி டிக்கெட் கட்டணத்தையும் திருப்பியளிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஹ்மானுக்கு ஆதரவாகவும், அவரது ரசிகர்கள் தங்களது கருத்துகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Share This Post

Post Comment