ஈழத்தமிழர்களின் பொதுவாக்கெடுப்புக்கான இலச்சினையை வரைய ஒரு வாய்ப்பு !!

ஈழத்தமிழர்களின் அரசியற் தீர்வுக்கான சிறந்த பொறிமுறையாக கருதப்படும் பொதுவாக்கெடுப்புக்கான(Referendum) பரப்புரைக்கு, இலச்சினை ஒன்றினை  உருவாக்கும் பொருட்டு, அறிவித்தல் ஒன்றினை பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ளது.
பொதுவாக்கெடுப்புக்கான அனைத்துலக ஆதரவினைத் திரட்டும் பணியினை மேற்கொண்டு வரும் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் , கனடாவின் ரொறன்ரோ பெருநகரில் இயங்கி வருகின்றது.
logo-design-service-500x500இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள மக்கள் இயக்கத்தின் தலைமை நிறைவேற்றுச் செயலாளர் நிமால் வினாயகமூர்த்தி அவர்கள் விடுத்துள்ளார்.
இலங்கைத்தீவுக்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியற் தலைவிதியை தாமே தீர்மானிக்கும் வகையில், தமது விருப்பத்தை வெளியிடுவதற்குரிய ஜனநாயக பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பினை கோருகின்றனர் என்பதே இலச்சினைக்குரிய கருப்பொருளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் வரலாற்று தடத்தில் இடம்பிடிக்கும் இந்த இலச்சினையை ஒன்றை வடிவமைக்கும்  வாய்ப்பினை பெற்றுக் கொள்ளுங்கள் என வரைகலைஞர்கள், ஓவியர்கள் என அனைவரிடமும் அழைப்பினை விடுத்துள்ள இந்த மக்கள் இயக்கம், இதற்கு 500 அமெரிக்க டொலர்களை சன்மானமாகவும் அறிவித்துள்ளது.
இலச்சினை வரைவில் கவனிக்கப்பட வேண்டியவை :
– கருப்பொருளுக்கு பொருத்தமானதாகவும்  இலகுவாகப் புரியும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும்.
 
– இலச்சினை வண்ணத்தில் இருக்கலாம். ஆனால் கறுப்பு வெள்ளையில் பிரதியெடுக்கும்போதும் இலச்சினை தரும் தாக்கம் மாறுபடுவதாக இருத்தல் ஆகாது. 
 
– இலச்சினையுடன் எழுத்துக்களும் இணைந்து இருத்தல் வேண்டும். ‘தமிழர் தலைவிதி தமிழர் கையில்’  என்ற தமிழ் வாசகமும், ‘ Tamils Right to Decideஎன்ற ஆங்கில வாசகமும் இலச்சினையையோடு இணைந்திருத்தல் வேண்டும். 
 
– வட்ட அல்லது சதுர வடிவில் இருக்குமாறு முழு இலச்சினை அமைந்திருத்தல் நன்று.
 
– பெரிதாகவும், சிறிதாகவும் இலச்சினை பாவிக்கப்படும் போது, அதன் உள்ளாந்த தாக்கம், எழுத்துருக்கள் ஆகியன தெளிவானதாக இருக்குமாறு வடிவமைப்பது அவசியமாகும். 
 
– தனித்துவமானதாக இருக்க வேண்டும் அன்றி வெட்டி ஒட்டியதான பிரதியீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படலாகாது.
 
– தனித்துவமானதாக இருக்க வேண்டும்.
வடிவமைப்புக்கள் கணனி வழி உருவாக்கம் அல்லது உருமாற்றம் செய்யப்பட்டு எதிர்வரும் 2018 செப்டெம்பர் 30ந் திகதிக்கு முன்னர் info@yestoreferendum.org
இந்த மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.
இவ்வாறு பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாதம் ஊடகசேவை

Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *