வெற்றி வாய்ப்பு தரும் விஜயதசமி

ekuruvi-aiya8-X3

vdasamiஇன்று 30.9.17 (சனிக்கிழமை) விஜயதசமி ஆகும். இந்த நாள் ஓர் சிறப்பான நாள் ஆகும்.

இந்து புராணத்தின் படி எருமை தலை கொண்ட மகிசன் என்னும் அரக்கன் சாமுண்டி மலையை ஆக்கிர மித்து கொடுமையான அட்டகாசம் செய்து வந்தான். 3 பெண் சக்திகள் கொண்டு தான் அவனை அழிக்க முடியும். வேறு யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றிருந்தான்.

அவனது அட்ட காசத்தை கண்ட முப்பெருந்தேவியரான சரஸ்வதி, மகாலட்சுமி, பராசக்தி ஆகியோர் இணைந்து துர்கா அவதாரம் எடுத்து 9 நாட்கள் தவம் இருந்து 10-வது நாளான தசமி திதியன்று, அந்த அரக்கனை வதம் செய்தனர். அந்த நாளையே விஜயதசமி என்ற வெற்றி நாளாக கொண்டாடுகிறோம்.

இந்த நாளில் செய்யும் காரியம் அனைத்தும் வெற்றி கரமாக அமையும் என்பது ஐதீகம் ஆகும். குழந்தைகள் கல்வி பயில இந்த நாளை தேர்வு செய்து பள்ளியில் சேர்ப்பர். இந்த நாளில் குழந்தையின் நாவில் தேனை தொட்டு ஓம் என்று எழுதி கல்வியை துவக்கி வைப்பதும் ஐதீகம் ஆகும். கல்வி மட்டுமன்றி பயிற்சிகள், தொழில் போன்ற சகல நிகழ்வுகளையும் விஜயதசமி அன்று துவக்கி வைப்பதும் வழக்கமாகும்.

விஜயதசமி அன்று எடுத்த காரியம் தடங்கல் ஏதும் இன்றி வெற்றிகரமாக தொடரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு. அந்த நாளில் தொடங்க கூடிய கல்வியானது, மேலும் மேலும் வளர்ந்து தடையின்றி முன்னேறுகிறது. மேலும் இந்த நாளில் ஆரம்பித்த தொழில் வெற்றிகரமாக அமைகிறது. எந்தவித நஷ்டமும் இன்றி லாபகரமாகவே அமைகிறது.

மேலும் இந்த நாளில் துவக்கி வைக்க கூடிய பயிற்சி கள் அனைத்தும் தங்கு தடையின்றி எளிதில் பயில கூடிய வகையில் அமைகிறது. மொத்தத்தில் சகல காரியங்களுக்கும் வெற்றி தரக்கூடிய நாளாக விஜயதசமி அமைகிறது.

Share This Post

Post Comment