இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களுக்கு ஏற்படும் வலிகளும், தீர்வுகளும்..

Two-Wheeler-Driving-womenஇருசக்கர வாகனம் ஓட்டும் ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து வலிகளும் பெண்களுக்கும் ஏற்படும் என்றாலும், பருவத்தின் அடிப்படையில் பெண்களுக்கு வலியால் அதிக அவஸ்தை ஏற்படவும் செய்யலாம். பெண்கள் வீட்டு வேலைகளை செய்கிறார்கள். மாத விலக்கு, கர்ப்பம், பிரசவம், மோனோபாஸ் போன்றவைகளையும் எதிர்கொள்கிறார்கள்.

கர்ப்பத்தின் போது 12 கிலோ வரை பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது. அந்த எடை முதுகுப்பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டு, பிரசவத்திற்கு பிறகு இயல்புக்கு வருகிறது. இந்த மாற்றங்களால், அதிக நேரம் பெண்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால் வலி தவிர்க்க முடியாததாகிவிடும்.

ஐம்பது வயதை தொடும் மோனோபாஸ் பருவத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடுவதால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து ‘ஆஸ்டியோபொராசிஸ்’ தோன்றும். அதுவும் வலியை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும். அதனால் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பெண்கள், அது தொடர்பான வலிகள் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்திவிடக்கூடாது. உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

வலி நீக்கும் தீர்வுகள் :

எலும்புகளை பலப்படுத்த தினமும் 15 நிமிடங்கள் உடலில் வெயில்படும்படி நடக்க வேண்டும். வெயில் கொண்டால்தான் வைட்டமின்-டி மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் ‘டெபாசிட்’ ஆகும். கால்சியம் உடல்பலத்திற்கு மிக அவசியம்.

வலிக்கான அறிகுறிகள் தென்படும்போது சுயமாக மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். எலும்பு சிகிச்சை அளிக்கும் டாக்டரின் நேரடி ஆலோசனையை பெற வேண்டும். ஏன் என்றால் சில பாதிப்புகளை தொடக்கத்திலே உங்கள் டாக்டரால் மாத்திரைகள் மூலமாகவே சரிசெய்திட முடியும். சிலருக்கு பிசியோதெரபி தேவைப்படும். எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்து மேற்சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.


Related News

 • மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
 • எதிர்மறை எண்ணங்களை அழிக்கும் சிவலிங்க முத்திரை
 • இயற்கை முறையில் முக அழகை பராமரிக்கும் வழிகள்
 • மீடூ பாலியல் புகார்களை தெரிவிக்க தனி இ-மெயில் முகவரியை அறிவித்தது டெல்லி பெண்கள் ஆணையம்
 • ஒரு கிளாஸ் மது வாழ்நாளில் 20 சதவிகிதத்தை விழுங்கிவிடும் – ஆய்வில் தகவல்
 • குருப்பெயர்ச்சி பலன்கள் – 2018-2019
 • சரும பொலிவு தரும் வாழைப்பழ தோல்
 • இரவில் வாக்கிங் போவது உடலுக்கு நல்லதா?
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *