நியாண்டர்தல் மனித இனம் அழிவுக்கு குளிர் காலநிலையை கையாள தெரியாததே காரணம்

Neanderthals-30ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்டங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் வருடங்களுக்கு முன் நியாண்டர்தல் என்ற மனித இனம் வாழ்ந்துள்ளது.  இந்த இனம் நமது முன்னோர்களுடன் நெருங்கிய தொடர்புடையது.

எனினும் 40 ஆயிரம் வருடங்களுக்கு முன் கடைசி ஐஸ் ஏஜ் காலத்தில் மற்றும் நவீன மனிதர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தந்த காலத்தில் இந்த இனம் அழிந்து விட்டது.

நியாண்டர்தல் மனித இனம் அழிந்து போனதற்கான காரணம் என்ன? என்பது பற்றி பல வருடங்களாக ஆய்வாளர்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் நார்தம்ப்ரியா பல்கலை கழகத்தினை சேர்ந்த ஆய்வாளர்கள் உள்பட சிலர் நியாண்டர்தல் மனித இனம் அழிந்து போவதற்கு பருவகால மாற்றம் பெரும் பங்கு வகித்திருக்க கூடும் என்று கண்டறிந்து உள்ளனர்.

இதற்காக அவர்கள் ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள ருமேனியா நாட்டில் உள்ள இரு குகைகளை ஆய்வு மேற்கொண்டனர்.

அவற்றில் ஸ்டாலக்மைட் என்ற ஒரு வகை பெருங்கற்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.  குகைகளின் உள்ளே மேல்தளத்தில் இருந்து தரையில் விழும் பொருட்கள் மெல்ல சேர்ந்து ஒரு வகையான பெருங்கற்களாக உருவாகின்றன.  இது ஸ்டாலக்மைட் எனப்படுகிறது.

அதில் படிந்த ரசாயன பொருட்கள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன.  இந்த ரசாயன பொருள் ஒவ்வொரு வருடமும் மெல்லிய படலம்  போல் வளர்ந்து வருகிறது.  தட்பவெப்பத்தில் ஏற்படும் மாற்றம் இந்த ரசாயன பொருளில் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது.

இதனால் பல ஆயிர வருட பருவகால மாற்றத்தின் இயற்கை தொகுப்பினை இந்த படிவங்கள் பாதுகாக்கின்றன.  இவை ஆய்வுக்கு பயன்பட்டுள்ளன.

ஐரோப்பிய கண்டத்தின் பருவகால மாற்றம் பற்றிய முந்தைய பதிவுகளை விட இந்த குகைகளில் அதிக அளவிலான விரிவான பதிவுகள் கிடைத்துள்ளன.

இதில் 44 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வருடங்களுக்கு இடைப்பட்ட முந்தைய காலத்தில் ஐரோப்பியாவில் நீண்டகால தீவிர குளிர் சூழல் நிறைந்து இருந்ததும் மற்றும் திடீரென அதிக அளவிலான வறண்ட நிலை ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.

குளிர் மெல்ல உயர்ந்து, பின் பல நூற்றாண்டுகளுக்கு அதிக குளிர் நீடித்து அதன்பின் மீண்டும் வெப்பம் மெல்ல உயர்ந்து வரும் சுழற்சியான தட்பவெப்ப நிலை இருந்ததும் சுட்டி காட்டப்பட்டு உள்ளது.

புவி வரலாற்றின் பருவகால மாற்றங்கள் பற்றிய இந்த பதிவுகளை ஆய்வாளர்கள் நியாண்டர்தல் மனித இனத்தின் கலை பொருட்கள் பற்றிய தொல்லியல் துறை ஆவண பதிவுகளுடன் ஒப்பிட்டு உள்ளனர்.  அதில் குளிர்கால இடைவெளிகள் மற்றும் நியாண்டர்தல் கருவிகள் இடையே தொடர்பு இருப்பது தெரிய வந்தது.  இந்த காலங்களில் நியாண்டர்தல் கருவிகள் இல்லாதது தெரிய வந்துள்ளது.

இந்த குளிர் காலங்களில் நியாண்டர்தல் மக்கள் தொகை பெரிய அளவில் குறைந்துள்ளது என்பது சுட்டி காட்டப்பட்டு உள்ளது.  இதனால் அவர்களின் வீழ்ச்சிக்கு பருவகால மாற்றம் ஒரு பங்கு வகித்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


Related News

 • குழந்தைகளுக்கு ரப்பர் நிப்பிளால் ஏற்படும் பாதிப்புகள்
 • மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
 • எதிர்மறை எண்ணங்களை அழிக்கும் சிவலிங்க முத்திரை
 • இயற்கை முறையில் முக அழகை பராமரிக்கும் வழிகள்
 • மீடூ பாலியல் புகார்களை தெரிவிக்க தனி இ-மெயில் முகவரியை அறிவித்தது டெல்லி பெண்கள் ஆணையம்
 • ஒரு கிளாஸ் மது வாழ்நாளில் 20 சதவிகிதத்தை விழுங்கிவிடும் – ஆய்வில் தகவல்
 • குருப்பெயர்ச்சி பலன்கள் – 2018-2019
 • சரும பொலிவு தரும் வாழைப்பழ தோல்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *