தினமும் சைக்கிள் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

Thermo-Care-Heating

cycle26திடமான உடற்பயிற்சிக்குப் பிறகு மூளை சிறப்பாக வேலை செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அநேக பெற்றோர்களின் கவலை அவர்களது பிள்ளைகள் ஓரிடத்தில் சிறிது நேரம் அமைதியாய் அமர்வதில்லை, கவனிப்பதில்லை, முழு கவனத்துடன் வீட்டுப் பாடம் செய்வதில்லை என்பது தான் கவலைப்படும் பெற்றோர்கள் அவர்களுக்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சியினை தினமும் அளித்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆய்வுகள் கூறுவது உடல் ஆரோக்கியம் குறையும் பொழுது மூளையின் செயல் திறனும் குறைகின்றது என்பது தான்.

* உடற்பயிற்சி மன உளைச்சலை அகற்றும்.

* மனதினை அமைதியாய் வைக்கும்.

* மூளையின் செயல்திறனை கூர்மையாக்கும்.

* பார்ப்பதற்கு கம்பீர தோற்றம் அளிக்கும்.

* இவர்கள் மற்றவர்கள் மீது நட்புடன் இருப்பார்கள்.

* தங்களை பல விதத்திலும் திறமையானவராக வளர்த்துக் கொள்வர்.

* சைக்கிள் ஓட்டுவது உடற்பயிற்சி மட்டுமல்ல. இதயத்திற்கும் இப்பயிற்சி மிகவும் நல்லது.

* எளிதில் எடை குறையும்.

* இவர்களின் நோயற்ற தன்மை இவர்களை நீண்ட காலம் வாழ வைக்கின்றது.

* சைக்கிளில் தினமும் அரைமணி நேர அளவிலாவது பயணிக்க வேண்டும்.

* வெளி நாடுகளில் கர்ப்ப காலத்தில் கூட சைக்கிள் ஓட்டிச் செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அதற்குத் தகுந்த அறிவுரை மருத்துவர்களால் அளிக்கப்படுகின்றது. அவர்களும் அதனை முறையாய் பின்பற்றுவர்.

* சைக்கிளில் செல்பவர்களுக்கு நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்து விடுவார்கள்.

* பலர் தன் குடல் சீராய் இயங்க, மலச்சிக்கல் இன்றி இருக்க சைக்கிள் பயிற்சியினை மேற்கொள்கின்றனர்.

* சைக்கிள் விடுபவர்கள் பல நோய்களில் இருந்து காக்கப்படுவதினை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

இத்தனை நன்மைகள் நிறைந்த இப்பயிற்சியினை அனைவரும் கடைபிடிக்கலாம். பிள்ளைகள் பள்ளி, கல்லூரி சென்று வரலாம். பெரியோர் அலுவலகம் சென்று வரலாம். ஆனால் வயது, உயரம் இவற்றுகேற்ப தகுதியான சைக்கிளையே பயன்படுத்த வேண்டும் முறையான கையுறை, ஹெல்மெட், காலணி அவசியம். பெரியோர் அவரவர் உடல் தகுதி பற்றி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இனி வருங்காலத்தில் பெட்ரோல் செலவினை தவிர்க்க, உடல் ஆரோக்கியம் கூட சைக்கிளினை மக்களே நடை முறைபடுத்துவர்.

ideal-image

Share This Post

Post Comment