மன அழுத்தத்தால் (டென்ஷன்) அழகு பறிபோகும்

Thermo-Care-Heating

facial_05மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால், முகமும் அழகாக இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

சிலரைப் பார்த்தால் பிரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழம் மாதிரி எப்போதும் ‘ப்ரெஷ்‘ ஆக இருப்பார்கள். இன்னும் சிலர் எப்போதும் தூங்கி வழியும் முகத்தோடு இருப்பார்கள். சுறுசுறுப்பு அவர்களிடம் இருந்து ‘மிஸ்‘ ஆகி இருக்கும். அதனால், அவர்களது அழகும் காணாமல் போய் இருக்கும்.

இது தொடர்பாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அதாவது, இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும் என்கிற கோணத்தில் அந்த ஆய்வு அமைந்திருந்தது. 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம், அவர்கள் தினமும் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆய்வின் முடிவில், அடிக்கடி டென்ஷனாகும் நபர்களை காட்டிலும், டென்ஷன் ஆகாமல் எதையும் ‘டேக் இட் ஈஸி‘யாக எடுத்துக்கொள்பவர்கள் ப்ரெஷ் ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி ஆய்வாளர்கள் கூறும்போது, அழகுக்கும், மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால், முகமும் அழகாக இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

என்ன நீங்களும் டென்ஷன் பார்ட்டி என்றால், இப்போதே டென்ஷனை தூக்கி எறிந்துவிடுங்கள். இல்லையென்றால், அழகு உங்களிடம் இருந்து ‘எஸ்கேப்‘ ஆகிவிடும்.

ideal-image

Share This Post

Post Comment