வறுமையை போக்கும் லட்சுமி வழிபாடு

lakshmiலட்சுமி மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள்புரிபவள்.

* லட்சுமி யானையினை இரு புறங்களிலும் இருக்க கஜ லட்சுமியாக காட்சி அளித்தாலும் ஆந்தையும் சில குறிப்புகளில் வாகனமாக காட்டப்பட்டுள்ளது.

* மகா லட்சுமி எனும் பொழுது 16 வகையான வளங்கள் அதில் அஷ்ட சித்திகளும் உள்ளிட்டவை எனப்படுகின்றது.

* ஆதி லட்சுமி
* தன லட்சுமி
* தான்ய லட்சுமி
* கஜ லட்சுமி
* சந்தான லட்சுமி
* வீர லட்சுமி
* வித்யா லட்சுமி
* விஜய லட்சுமி

என லட்சுமி விவரிக்கப்படுகின்றாள்.

தண்ணீரின் மீது மலரும் தாமரையில் அமர்ந்திருப்பவள் தண்ணீர் ஓடிக் கொண்டேதான் இருக்கும். அது போல் செல்வம் அனைவருக்கும் செல்லும் போது மட்டுமே அதன் பயன் முழுமை பெறும். செல்வம் இருந்தாலும் தாமரை போல் தாமரை இலைபோல் ஒட்டாது இருக்க வேண்டும் என்பதே பொருள்.

வளமும் செல்வமும் கொண்ட லட்சுமி இது போல பரலோக வாழ்க்கை இரண்டும் பெறச் செய்பவள். லட்சுமி மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி என்றும் அழைப்பதுண்டு.

லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள்; பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகின்றன. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள்புரிபவள். இவளுக்குத் தனிக்கோயில் இருக்குமிடம் திருப்பதியில் உள்ள திருச்சானூர்.


Related News

 • குழந்தைகளுக்கு ரப்பர் நிப்பிளால் ஏற்படும் பாதிப்புகள்
 • மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
 • எதிர்மறை எண்ணங்களை அழிக்கும் சிவலிங்க முத்திரை
 • இயற்கை முறையில் முக அழகை பராமரிக்கும் வழிகள்
 • மீடூ பாலியல் புகார்களை தெரிவிக்க தனி இ-மெயில் முகவரியை அறிவித்தது டெல்லி பெண்கள் ஆணையம்
 • ஒரு கிளாஸ் மது வாழ்நாளில் 20 சதவிகிதத்தை விழுங்கிவிடும் – ஆய்வில் தகவல்
 • குருப்பெயர்ச்சி பலன்கள் – 2018-2019
 • சரும பொலிவு தரும் வாழைப்பழ தோல்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *