பித்ருதோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோவில்

ekuruvi-aiya8-X3

kasi-viswanathar-templeதிருச்சி – கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் 9 நவக்கிரஹங்களும் தம் தேவியருடன் காட்சி தருகின்றனர். முன்பொருமுறை நாகம நாயக்கர் என்பவர் பிதுருதோஷம் நீங்க காவிரிக்கரையில் காசி விஸ்வநாதர் – ஸ்ரீவிசாலாட்சிக்கு கோயில் கட்டினார்.

அத்துடன் அனைத்து தோஷங்களும் நீங்க தேவியருடன் நவக்கிரஹங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பலனடைந்தார். ஆலமரங்கள் இப்பகுதியில் நிறைய உண்டு. அதன் பழங்கள் கீழே விழுந்து பழம் ஊர் ஆனது. பின்னர் அது மருவி பழுவூர் ஆனது. இப்போது பழூர் எனப்படுகிறது. இவ்வாலயத்தில் உள்ள நவக்கிரஹங்களை வழிபட்டால் பித்ருதோஷம் நீங்குகிறது.

Share This Post

Post Comment