காரில் அவசியம் இருக்க வேண்டிய உபகரணங்கள்

ekuruvi-aiya8-X3

car_23கார் பயணங்கள் பாதுகாப்பாகவும், இனிமையாகவும் அமைவதற்கு சில கருவிகள் மற்றும் உபகரணங்கள் முக்கியமானதாக இருக்கின்றன. அந்தவகையில், பாதுகாப்புக்கு உறுதுணை புரியும் சில கருவிகள் மற்றும் உபகரணங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

புதிதாக வாங்கிய காராக இருந்தாலும், பழைய காராக இருந்தாலும் இந்த ஆக்சஸெரீகளை கட்டாயம் வாங்கி வையுங்கள். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து ஆக்சஸெரீகளையும் ஆன்லைன் வியாபார தளங்களில் எளிதாக ஆர்டர் செய்து பெற முடியும்.

1. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

காருக்கு பின்னால் இருக்கும் பொருட்கள், வாகனங்கள் என அனைத்தையும் துல்லியமாக கண்டறிந்து எச்சரிக்கும் சென்சார்கள் காரின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானது. இப்போது, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆன்லைன் ஸ்டோர்களில் மிக குறைவான விலைக்கு பெற்றுக் கொள்ளவும், அதனை பொருத்தி தருவதற்கான வாய்ப்பையும் பெற முடிகிறது.

2. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா

காரை பின்புறமாக எடுக்கும்போது, பின்னால் இருக்கும் வாகனங்கள் மற்றும் பொருட்களை நேரடியாக பார்த்துக் கொண்டே காரை இயக்குவதற்கான வசதியை ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வழங்குகிறது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சாரைவிட இது சற்று விலை அதிகம். இரண்டையும் பொருத்துவதும் சாலச் சிறந்தது.

3. எதிரொலிப்பு பட்டை

இரவு நேரங்களில் காரை நிறுத்திவிட்டு செல்லும்போது பின்னால் வரும் வாகன ஓட்டிகள் எளிதாக காரை கண்டு எச்சரிக்கையாக ஓட்டுவதற்கு இந்த பட்டைகள் உதவுகின்றன. மேலும், சமிக்ஞை விளக்குகளையும், ஹசார்டு விளக்குகளையும் போட வில்லை என்றாலும், இந்த பட்டைகளை பம்பரில் ஒட்டி வைத்துவிட்டால் முன்பின் வரும் வாகன ஓட்டிகள் இதன் எதிரொலிப்பு மூலம் வாகன நிற்பதை கண்டு கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். 3எம் நிறுவனம் கூட இந்த எதிரொலிப்பு பட்டையை விற்பனை செய்கிறது. மிக குறைவான விலையில் கிடைக்கும் இந்த எதிரொலிப்பு பட்டையின் பயனும், பாதுகாப்பும் அதிகம்.

4. சுத்தியல்

விபத்தில் சிக்கி காருக்குள் சிக்கிக் கொள்ளும்போது, கார் ஜன்னல்களை உடைத்து வெளியேறுவதற்கு இந்த சுத்தியல் பயன்படும். 350 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. அவசியம் வாங்கி காருக்குள் வைத்துக் கொள்ளுங்கள். அவசர சமயங்களில் உதவும்.

5. எல்இடி விளக்குகள்

எஸ்யூவி வகை வாகனங்களுக்கு மிகவும் அவசியமான ஆக்சஸெரீயாக கூறலாம். இருளான சமயத்தில் கரடு முரடான சாலைகளில் செல்லும்போது இந்த எல்இடி ஆக்சிலரி விளக்குகள் ஓட்டுனருக்கு தெளிவான பார்வையை வழங்க உதவும். ஒரு ஜோடி எல்இடி ஆக்சிலரி விளக்குகள் ரூ.1,950 முதல் கிடைக்கிறது.

இது மட்டுமல்லாமல், அவசியம் முதல் உதவிப்பெட்டியை தேவையான மருந்துகள், பஞ்சு, காட்டன் போன்றவற்றுடன் தயார் நிலையில் வைத்திருத்தல் மிகவும் அவசியமானதாகும்.

Share This Post

Post Comment