இயற்கை முறையில் முக அழகை பராமரிக்கும் வழிகள்

வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை அதிகரிக்கலாம். இயற்கையான முறையில் நம் அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

1. இயற்கை முறையிலேயே ப்ளீச் செய்ய முடியும். ஒரு டீஸ்பூன் பார்லி பவுடருடன் எலுமிச்சைசாறும் பாலும் கலந்து, ப்ளீச்சாக உபயோகிக்கலாம். இது, முகத்தை பளிச் என மாற்றும். வெயிலினால் ஏற்படும் கருமையையும் நீக்கும்.

face-152. கிளிசரினுக்குப் பதிலாகப் பால் உபயோகித்து மசாஜ் செய்யலாம். இது சருமத்துக்கு ஊட்டத்தையும் குளிர்ச்சியையும் ஏற்படுத்தி, முகப்பொலிவை அதிகப்படுத்தும்.

3. ரவையைத் தயிரில் ஊறவைத்து, ஸ்கர்ப்பாக உபயோகிக்கலாம். இது, முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இளமையுடன் இருக்கவும், முக அழகை அதிகரிக்கவும் செய்கிறது. ஆனால், வாரம் ஒருமுறை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

4. இப்போது பலருக்கும் இருக்கும் பிரச்சனை, வொய்ட் மார்க்ஸ், பிளாக் மார்க்ஸ். இதற்கு, வீட்டிலேயே தினமும் சூடான தண்ணீரில் 30 நிமிடங்கள் ஆவி பிடிக்கலாம். இது, முகத்தில் தூசியினால் ஏற்படும் அழுக்கையும் கிருமியையும் அகற்றி, புதிய செல்களை உருவாக்கும். முகத்துக்குப் புத்துணர்வை அளிக்கும்.

5. முகப்பருக்களால் ஏற்படும் குழியைச் சரிசெய்ய, கடலைமாவுடன் தண்ணீர் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ்பேக்காகப் போட்டு முகம் கழுவலாம்.

6. சென்ஸிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், லெமன் மாய்ஸ்டரைஸிங் செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக, ஐஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம். இது, முகத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தைப் பட்டுபோல வைத்திருக்கும்.

7. டிரை ஸ்கின் உடையவர்கள், அதிமதுரமும் பாலும் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ்பேக் போட்டு முகம் கழுவுங்கள். சருமம் மென்மை பெறுவதுடன், பருக்கள் வராமல் காக்கும்.

8. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, கோரைக்கிழங்கும் மஞ்சளும் சேர்த்து, முடிக்கு எதிர்ப்பக்கமாக தேய்க்கவும். நாளடைவில் தானாகவே முடிகள் உதிர்ந்துவிடும்.


Related News

 • குழந்தைகளுக்கு ரப்பர் நிப்பிளால் ஏற்படும் பாதிப்புகள்
 • மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
 • எதிர்மறை எண்ணங்களை அழிக்கும் சிவலிங்க முத்திரை
 • இயற்கை முறையில் முக அழகை பராமரிக்கும் வழிகள்
 • மீடூ பாலியல் புகார்களை தெரிவிக்க தனி இ-மெயில் முகவரியை அறிவித்தது டெல்லி பெண்கள் ஆணையம்
 • ஒரு கிளாஸ் மது வாழ்நாளில் 20 சதவிகிதத்தை விழுங்கிவிடும் – ஆய்வில் தகவல்
 • குருப்பெயர்ச்சி பலன்கள் – 2018-2019
 • சரும பொலிவு தரும் வாழைப்பழ தோல்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *