மழைக்காலத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது கவனிக்க வேண்டியவை

ekuruvi-aiya8-X3

rain_studentsதொடர் மழை இல்லாவிட்டாலும் அவ்வப்போது மழை பெய்யும் காலம் இது. பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் கீழ்க்காணும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1. பிள்ளைகளுக்கு வழக்கமாகக் கொடுத்தனுப்பும் பாட்டிலில், நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி, இளஞ்சூட்டுக்கு வந்ததும் அதை ஊற்றிக் கொடுக்கவும். ஏனெனில் சளி பிடித்துகொள்வது தொடங்கிக் காய்ச்சல் வரை பிள்ளைகளைப் பாதிப்படைவதிலிருந்து காத்துக்கொள்ள இது அவசியம். குளிர்ந்த நீரைக் குடித்தே பழக்கப்பட்டிருந்தாலும் மழைக்காலம் முடியும் வரை வெந்நீர் குடிக்கப் பழக்குங்கள்.

2. மழைக்காலத்தில் சளி பிடித்திருக்கலாம். அதனால், அடிக்கடி தும்மல் வரக்கூடும் அல்லது மூக்கிலிருந்து சளி வரக்கூடும். அந்த நேரங்களில் பயன்படுத்திக்கொள்ள கர்சீஃப் மிக அவசியம். மற்ற குழந்தைகள் தும்மும்போது காற்றில் கிருமிகள் பரவக்கூடும். அந்த நேரத்தில் உங்கள் பிள்ளைகள் கர்சீஃப் பயன்படுத்தவும் அறிவுறுத்துங்கள்.

3. மழையில் நனைவது குழந்தைகளின் உடல்நிலையைப் பாதிக்கும் என்பதால், மறக்காமல் குடை அல்லது ரெயின் கோட் கொடுத்து அனுப்புங்கள். காலையில் புறப்படும்போது நன்றாக வெயில் அடிக்கலாம். ஆனால், மதியத்துக்கு மேல் மழை வரக்கூடும் அதனால் எதற்கும் இருக்கட்டும் என, குடை அல்லது ரெயின் கோட்டைக் கொடுத்துவிடுங்கள்.

4. குழந்தைகள் மழைக்காலத்தில் பள்ளிக்கு சூ அணிந்துசெல்லும்போது தேங்கியிருக்கும் மழைநீரில் காலை நனைத்துவிட்டால் அதனுள் நீர் தங்கிவிடும். மேலும் சாக்ஸின் ஈரத்தால் நாள் முழுவதும் ஈரத்தில் நிற்பது போன்ற நிலை உருவாகும். அதனால், பள்ளி நிர்வாகத்திடம் பேசி சில நாள்களுக்கு மட்டும் செறுப்பு அணிந்து வர அனுமதி கேளுங்கள்.

5 மழைக்காலத்தில் குழந்தைகள், பள்ளிக்கு வேன் அல்லது ஆட்டோவில் செல்லும்போது அணிந்துகொள்ள ஸ்வெட்டர் இருப்பின் மறக்காமல் கொடுத்து அனுப்பவும்.

Share This Post

Post Comment