அதிகளவில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . . .

ideal-image

tensionஇன்றைய இயந்திர வாழ்வில் நிம்மதி இல்லை , சந்தோசம் இல்லை , தூக்கம் இல்லை, இப்படி நீண்டுகொண்டே போகிறது . ஒரு மனிதனுக்கு என்னதான் அதிக வேலை இருந்தாலும் நிம்மதியான தூக்கம் முக்கியம் . உடம்புக்கு ஓய்வு தேவை . ஓய்வில்லாமல் உழைத்தாலோ, அல்லது நித்திரை வராமல் தவித்தாலோ உங்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் வந்து விட ஆரம்பித்து விடும் .

மன அழுத்தத்தால் பலரும் தூக்கம் வராமல் தவிக்கிறார்கள் . இதில் ஆண்களும் சரி , பெண்களும் சரி மன அழுத்தத்தால் இருவரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் . நிம்மதியான உறக்கத்துக்கு மன அழுத்தத்தை குறைத்தல் நல்லது .

நாம் மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும் . கொஞ்ச நேரம் சிரமம் பாராமல் உடல் பயிற்சி செய்யுங்கள் . உடம்பும் தெம்பாகும், களைப்பு நீங்கும் . அப்போது உடம்பு அசதியாகும் . பின்பு போய் உறங்க செல்லுங்கள் . நித்திரை வரும் .

ஒரு சிந்தனை குறிப்புகள், வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்த புத்தகங்களை எடுத்து வாசியுங்கள். அதன் பின்பு நித்திரைக்கு செல்லுங்கள் . மனதை அமைதிப்படுத்துங்கள் . அதிகமாக யோசிக்காதீர்கள். நீங்கள் கவலைப்படுவதால் எதுவும் மாறப்போவதில்லை.

மனதை ஒருநிலைப்படுத்துங்கள். தியானம் செய்யுங்கள். யோக பயிற்சி செய்யுங்கள். நித்திரைக்கு செல்லுங்கள். மனம் அமைதியாக இருக்கும் போது தூக்கம் உடனே வந்துவிடும் .

நித்திரைக்கு செல்லும் முன் ஒரு கப் பால் அருந்தி விட்டு நித்திரைக்கு செல்லுங்கள் . சத்தான உணவுகளை உண்ணுங்கள். இரவில் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள். இரவில் அளவுக்கு அதிகமான உணவுகளை உண்ணாமல், எளிதில் செரிமானம் அடையக் கூடிய இலேசான உணவுகளை உண்ணுங்கள் .

உங்களுக்கு பிடித்த இதமான, மெலிதான இசையுடன் கூடிய பாடல்களை கேட்டுக் கொண்டு நித்திரை செய்யுங்கள் . தூக்கம் உங்கள் கண்களை வருடும். மனதும் தெம்பாக இருக்கும் .

இவை எல்லாம் நாம் மன அழுத்தத்தை குறைக்கும் வழி முறைகள். மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள் நம்மிடமே உண்டு . இதுக்கு எல்லாம் வைத்தியரை நாடி மருந்து குடித்து தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில வழிமுறைகளை நாம் பின்பற்றி பார்க்கலாம் . அது சரிவரவில்லை என்றால் தகுந்த மருத்துவரை நாடலாம் .

ideal-image

Share This Post

Post Comment