வெயிலில் குழந்தைகளுக்கு வரும் வேனல் கட்டியை போக்கும் வீட்டு வைத்தியம்

summer-heat-rashவெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் வேனல் கட்டிகள் ஏற்படும். அவ்வேளைகளில் கடைகளில் கிடைக்கக்கூடிய பவுடர்களை பயன்படுத்துவதை விட எளிமையான வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்துவது நல்லது.

வெயில் காலத்தில் முகத்தில் கொப்பளங்களோ, கட்டிகளோ வருவதற்கு முதல் காரணம், உடலில் எதிர்ப்புசக்தி குறைவதுதான். இரண்டாவது காரணம், அதிகமாக வியர்வையால் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி, உலர்ந்த தன்மை ஏற்படும். இதனை, நீர்ப்போக்கு (Dehydration) என்பார்கள். இந்த இரண்டு காரணங்களால்தான் சருமத்தில் பெரும்பாலும் கட்டிகள் ஏற்படுகின்றன.

சிலருக்கு வெயில் காலத்தில் மலச்சிக்கல் ஏற்படும். இதனாலும் முகத்தில் கட்டிகள் ஏற்படலாம். உடலிலுள்ள கழிவுகளும், உடல்சூடும் வெளியேறாமல் உடலிலேயே தங்குவதால், இந்தக் கட்டிகள் ஏற்படுகின்றன. எனவே, வெயில் காலத்துக்கு முன்பிலிருந்தே சருமத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கோடை வெயிலில் குழந்தைகள் விளையாடும்போதும் கூட மறக்காமல் அதிக தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு லிட்டராவது குடிக்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பதனால், உடலில் சூடு தங்குவது தடுக்கப்படும். வாரத்துக்கு இரண்டு முறை, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யைத் தேய்த்துக் குளிக்கும்போது, அதில் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டுக் குளிக்கவும். வெயில் காலத்தில், விளக்கெண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, உடலின் சூடு வெளியேறி புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

நாட்டு மருந்துக் கடைகளில் குளிர் தாமரை தைலம் கிடைக்கும். அந்த எண்ணெயுடன், அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய், இயற்கையான சன்ஸ்கிரீன் லோஷன். குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி வந்தால், வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்க முடியும்.

கறிவேப்பிலையை காம்புடன் எடுத்துக்கொள்ளவும். நான்கு அல்லது ஐந்து சொட்டு விளக்கெண்ணெய்யை ஒரு பாத்திரத்தில்விட்டு, அந்தக் கறிவேப்பிலை காம்பை விளக்கெண்ணெயுடன் உரசினால், விழுது போன்று கிடைக்கும். அதனை, வேனில்கட்டிகள் வந்துள்ள இடங்களில் பூசி வந்தால், கட்டிகள் நீங்கும்.

நாட்டு மருந்துக் கடைகளில் செங்காவி கிடைக்கும். அதனை பவுடராக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மாவு பதத்துக்குச் செய்துகொள்ளவும். பின்னர், அதனுடன் 10 சொட்டு விளக்கெண்ணெய், 2 சொட்டு தேன் கலந்து, வேனில்கட்டிகளில் பூசினால், இரண்டே நாள்களில் கட்டிகள் மறைந்துவிடும்.


Related News

 • சரும பிரச்சனைகளை தீர்க்கும் துளசி பேஸ் பேக்
 • குழந்தைகளுக்கு ரப்பர் நிப்பிளால் ஏற்படும் பாதிப்புகள்
 • மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
 • எதிர்மறை எண்ணங்களை அழிக்கும் சிவலிங்க முத்திரை
 • இயற்கை முறையில் முக அழகை பராமரிக்கும் வழிகள்
 • மீடூ பாலியல் புகார்களை தெரிவிக்க தனி இ-மெயில் முகவரியை அறிவித்தது டெல்லி பெண்கள் ஆணையம்
 • ஒரு கிளாஸ் மது வாழ்நாளில் 20 சதவிகிதத்தை விழுங்கிவிடும் – ஆய்வில் தகவல்
 • குருப்பெயர்ச்சி பலன்கள் – 2018-2019
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *