இடுப்பிற்கு அழகான வடிவை கொடுக்கும் ஆசனம்

ekuruvi-aiya8-X3

ardha-matsyendrasanaஇடுப்பில் உள்ள கூடுதல் சதையை குறைத்து இடுப்பிற்கு அழகான வடிவைக் கொடுக்கும் ஆசனம் இது. இந்த ஆசனம் செய்முறையை தெரிந்துக் கொள்வோம்.

பெயர் விளக்கம்: “அர்த்த” என்றால் பாதி. இந்த ஆசனம் உலகுக்கு முதலில் ஹடயோகத்தை போதித்த மத்ஸ்யேந்திரநாதர் பெயரில் அழைக்கப்படுகிறது. இதில் முழு நிலைமத்ஸ்யேந்திராசனம் ஒன்று உள்ளது. அதன் பாதிநிலை ஆசனமாக இது இருப்பதால் அர்த்த மத்ஸ்யேந்திராசனம் என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை: கால்களை நீட்டி தரை விரிப்பின் மேல் உட்காரவும். பாதம் இரண்டும் சேர்ந்து இருக்கட்டும். கைகள் பிருட்சடத்திற்கு இருபக்கமும் சற்று தள்ளி இரண்டு உள்ளங்கைகளையும் ஊன்றி வைக்கவும். முழங்கைகளை மடக்காமல் நேராக இருக்கட்டும். முதுகை சிறிதளவு பின்னால் சாய்க்கவும். உடல் எடை மணிக்கட்டுப் பகுதியில் இருக்கட்டும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். கண்களை மூடவும். இந்நிலைக்கு தண்டாசனம் என்று பெயர். பிறகு வலது கையை மடக்கி முழங்கை பகுதியை இடது காலுக்கு வெளியே வைக்கவும்.

மூச்சை வெளியே விட்டு இடது முழங்காலை வலது முழங்கையினால் அழுத்தி தள்ளியவாறு வலக்கை விரல்களினால் இடது பாதத்தின் அடிப்பகுதியை பிடித்துக் கொள்ளவும். இடது கையை பின்னோக்கி எடுத்துச் சென்று வலது தொடையை தொட முயலவும். தலையை இடது தோள் பக்கம் திருப்பி வைக்கவும். கண்களால் புருவமத்தியை பார்க்கவும்.

இந்த ஆசன நிலையில் 1 முதல் 2 நிமிடம் சாதாரண மூச்சுடன் நிலைத் திருக்கவும். பிறகு மூச்சை வெளியே விட்டு பின் நிலைக்கு வந்து, கால்களை நீட்டி தண்டாசனம் செய்யவும்.

கால்களை மாற்றி மேற்கண்ட முறைப்படி மீண்டும் ஒருமுறை பயிற்சி செய்யவும். ஆரம்பத்தில் முடிந்தளவு காலம் பயிற்சி செய்யவும். இருகால்களையும் மாற்றி செய்யும் கால அளவுசமமாக இருக்கட்டும்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்: முதுகுத் தண்டு, இடுப்பு மறறும் மூச்சின் மீதும், ஆக்ஞா அல்லது மணிப்புர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சிக் குறிப்பு: புதிதாக பழகும் போது சிலருக்கு சுவாச இயக்கம் வேகமாக இருக்கும். ஆனாலும் பழகப்பழக சாதாரண நிலைக்கு வந்து விடும். மெல்லிய உடல்வாகு உள்ளவர்கள் சுலபமாக இந்த ஆசனத்ததை செய்ய முடிகிறது. தொந்தி வயிறு உள்ளவர்கள் செய்வதற்கு கடினமாக இருக்கும்.

தடைக் குறிப்பு: விரை வாதம், மூல நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாது. தைராய்டு வீக்கம், குடலிறக்கம், வயிற்றில் புண் உள்ளவர்கள் யோக நிபுணரிடம் ஆலோசனை பெற்று செய்ய வேண்டும்.

பயன்கள்: ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதில் மிகச் சிறந்த ஆசனம் இது. அஜீரணம் நீங்கும். பசி அதிகமாகும். தொந்தி குறையும். குடலில் தீயகிருமிகள் உண்டாவதை தடுக்கிறது. இடுப்பில் உள்ள கூடுதல் சதையை குறைத்து இடுப்பிற்கு அழகான வடிவைக் கொடுக்கும். மலச்சிக்கல் நீங்கும். நீரிழிவுக்கு பயனுள்ள ஆசனம் இது. பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் எனும் நோயை விரைவில் குணப்படுத்துகிறது. கருப்பை பலம் பெரும். மாதவிலக்கு ஒழுங்குபடும்.

Share This Post

Post Comment