ஆர்.கே.நகர் வேட்புமனு தாக்கல் – நாளையுடன் முடிகிறது

ekuruvi-aiya8-X3

zonal_office_RKNagarஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் (மார்ச் 23) முடிவடைகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகருக்கு ஏப்ரல் 12 ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுக்கள் ஏப்ரல் 15ம் தேதி எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இதுவரை 24 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பவை பற்றி தேர்தல் கமிஷன் இன்று (மார்ச் 22) முடிவு செய்ய உள்ளது. இதனால் சசிகலா அணி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதுசூதனன் ஆகியோர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி ஆர்.கே.நகரில் 8 முனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது.

Share This Post

Post Comment