லசந்தவை படுகொலை செய்தவரின் அடையாளங்களை வெளிப்படுத்தத் தயார்!

Thermo-Care-Heating

mahinda-5சண்டே லீடர் பத்திரிகையாசிரியரைக் கொலை செய்தவரின் அடையாளங்களை வெளிப்படுத்தத் தயார் என முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவுக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் தெரியுமெனவும், அது தொடர்பாக கோத்தாபய ராஜபக்ஷவே பதில் கூறவேண்டுமெனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின்போது தெரிவித்திருந்தார்.

மேலும் இப்படுகொலை தொடர்பாக சகோதரர்களான முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடாத்தப்படவேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய மகிந்த ராஜபக்ஷ,

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யாரென இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னிடம் விசாரணை நடாத்தினால் நான் அது தொடர்பான தகவல்களை வெளியிடுவேன்.

சில தரப்பினர் அதன் விளைவுகள் மற்றும் தீவிரத் தன்மையை விளங்கிக்கொள்ளாது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

ideal-image

Share This Post

Post Comment