லண்டனில் இந்திய வம்சாவளிப் பெண் பிணமாக சூட்கேசில் கண்டெடுப்பு

ekuruvi-aiya8-X3

suitcase_girlஇந்திய வம்சாவளிப் பெண்ணாகிய கிரண் தாவுதியா (46) இங்கிலாந்து நாட்டின் கிழக்கு மிட்லாண்ட்ஸ் பிராந்திய பகுதியில் உள்ள பிரபல கால்சென்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இரண்டு குழந்தைகளின் தாயாகிய இவர் கடந்த செவ்வாய்க்கிழமை சூட்கேஸ் ஒன்றினுள் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் பிரிட்டன் போலீசார் கிரணின் கொலை தொடர்பாக அவரின் முன்னாள் கணவர் அஸ்வின் தாவுதியாவைக் கைது செய்து போலீஸ் காவலில் வைத்துள்ளார்.

கடந்த 17 வருடங்களாக எங்களது நிறுவனத்தில் வேலை செய்துவந்த கிரணின் மரணம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக போலீசாரின் விசாரணைக்கு எங்களால் முடிந்த ஒத்துழைப்பை தருவோம் என கிரண் வேலைசெய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேலை முடிந்து எனது சகோதரி இன்னும் வீடு திரும்பவில்லை என நேற்று காலை 9.3௦ மணியளவில் கிரணின் சகோதரி ஜாஸ்பிர் கவுர் போலீசில் புகார் செய்தார். ஜாஸ்பிரின் புகாரைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில் சூட்கேசில் பிணமாக அடைத்து வைக்கப்பட்ட கிரண் கண்டெடுக்கப்பட்டார்.

Share This Post

Post Comment