மேடை சரிந்து விழுந்தது:லாலு பிரசாத் காயம்

ekuruvi-aiya8-X3

Laluபீகார் மாநிலம் பாட்னா அருகே டிக்ஹா என்ற பகுதியில் பொது நிகழ்ச்சி நடந்தது. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத், இவரது மகன்கள் தேஜாஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி நடந்த மேடையில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். அப்போது மேடை திடீரென சரிந்தது. இதில் லாலு காயமடைந்தார்.

உடனடியாக ஐ.ஜி.ஐ.எம்.எஸ்.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் லாலு வீடு திரும்பினார். டாக்டர்கள் கூறுகையில், லாலுவுக்கு முதுகில் லேசான காயம் ஏற்பட்டது சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார் என்றனர்.

Share This Post

Post Comment