குற்றத்தை ஒப்புக்கொண்டார் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண!

Thermo-Care-Heating

Maj.Gen_.Kamal-Gunaratneஅண்மையில் க.பொ.த.சாதாரண தேர்வு எழுதிய மாணவனை அச்சுறுத்திய குற்றச்சாட்டினை இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ஒப்புக்கொண்டுள்ளார்.

க.பொ.சாதாரண தரத் தேர்வில் கணித பாடத்தை எழுதிவிட்டு வெளியில் வந்த மாணவனை அண்மையில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண, மாணவனின் சீருடையைப் பிடித்திழுந்து அச்சுறுத்தியதுடன் தாக்கவும் முற்பட்டார் என்ற குற்றச் சாட்டை மறுத்து வந்ததுடன், தான் அந்நேரம் நாட்டில் இல்லையெனவும் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், க.பொ.த.சாதாரண தரத் தேர்வு நிறைவுற்றதும் மாணவனை அழைத்துச் சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு காவல்துறையில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்தது.

மாணவன் காவல்துறையில் முறைப்பாடு செய்ததையடுத்து, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதன்மூலம், அவர் பொய்யுரைத்தமை நிரூபணமாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு பாடசாலை மாணவனைத் தாக்குவதற்கு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு என்ன தகுதியுள்ளது எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

ideal-image

Share This Post

Post Comment