நேற்று மோடி அரசு மீது குற்றச்சாட்டு, இன்று பாராட்டு

ekuruvi-aiya8-X3

Punjab-Deputy-Chief-Ministerமுதல்-மந்திரிகள் மாநாட்டில் மோடி அரசு மீது குற்றச்சாட்டை முன் வைத்த பஞ்சாப் மாநில துணை முதல் சுக்பீர் சிங் பாதல், மறு நாளே மோடியை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து மாநில முதல்- மந்திரிகள் மாநாடு நேற்று முன் தினம்(சனிக்கிழமை) நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட 17 மூத்த மத்திய மந்திரிகள், அனைத்து மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கான வளர்ச்சி திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பஞ்சாப் மாநில சார்பில் துணை முதல்வர் சுக்பீக் சிங் பாதல் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பாதல் மத்திய மாநில அரசுகளின் முக்கியத்துவத்தை குறைத்து பிச்சைகாரர்களை போன்று ஆக்கிவிட்டதாக குற்றம்சாட்டினார். பஞ்சாப் மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியுடன் அகாலி தளம் கட்சி இணைந்து ஆட்சியில் உள்ளது.

இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சியுடன் உள்ள மாநில அரசுகளே மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக பேசப்பட்டது.

இந்நிலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) சுக்பீர் சிங் பாதல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு கூட்டாட்சியை ஊக்குவித்து செயல்படுவதாக பாராட்டியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை தாமதப்படுத்துகிறது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை காங்கிரஸ் கட்சியின் மீது அவர் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment