அவன்ட்கார்டே குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் புதிய ஆவணங்கள் ரஞ்சன் ராமாநாயக்கவினால் சமர்ப்பிப்பு

Thermo-Care-Heating

avancardo shipஅவன்ட்கார்டே நிறுவனத்திற்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் புதிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

குறிப்பிட்ட நிறுவனம் அரசாங்கத்தை சேர்ந்தவர்களிற்கு இலஞ்சம் வழங்க முன்வந்தது என்ற தனது குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவர் ஆவணங்களை கையளித்துள்ளார்.

தற்போது கோப் குழுவின் உறுப்பினராக உள்ள பிரதியமைச்சர் ஊழல்மற்றும் மோசடிகள் தொடர்பில் தனக்கு மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.அவன்ட் கார்டே தலைவர் மேற்கொண்ட உரையாடல் தொடர்பிலான ஓலிநாடாவொன்றை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment