குற்றமிழைத்தவர்களை தப்பிக்க இடமளிக்காதே!: ஜெனீவாவில் ஆர்ப்பாட்ட பேரணி

sdsd

geniva132166குற்றமிழைத்தவர்களை தப்பிப்பதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களால் இன்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜெனீவா ரயில் நிலையம் முன்பாக ஆரம்பமாகவுள்ள குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வு நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கட்டடம் வரை இடம்பெறவுள்ளது.

இதன்போது, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும், விசாரணைப் பொறிமுறையிலிருந்து சர்வதேச நீதிபதிகள் நீக்கப்படக் கூடாது, இறுதிகட்ட போரின் போது குற்றமிழைத்தவர்களை பாதுகாக்க நல்லாட்சிக்கு இடமளிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளது.

மேற்படி பேரணியில் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share This Post

Post Comment