பெட்ரோல் குடிக்கும் குரங்கு

ekuruvi-aiya8-X3

Petrol-addict-monkey-இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் நிரப்பும் செலவு தினசரி அடிப்படையில் மாறினாலும், இந்த குரங்கு உண்ணும் உணவு வகைகளில் பெட்ரோல் நிரந்தர இடம் பிடித்துள்ளது. பொதுவாக குரங்குகள் வாழைப்பழம் போன்ற பழ வகைகளை உண்டு பார்த்து பழக்கப்பட்ட மனித இனத்திற்கு பெட்ரோல் குடிக்கும் குரங்கு சற்றே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

ஹரியானா மாவட்டத்தின் பானிபட் பகுதியில் சுற்றி திரியும் குரங்கு அங்குள்ள மோட்டார்சைக்கிள்களில் நிரப்பப்பட்டுள்ள பெட்ரோலை குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்கிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளில் இருந்து குரங்கு ஒன்று பெட்ரோல் குடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வாகன நிறுத்துமிடத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டியூபிலேயே வாய் வைத்து பெட்ரோல் குடிக்கும் இந்த குரங்கு மற்ற குரங்குகளை போன்று வாழைப்பழங்களை உண்ணாது என்றும், அதிகளவு பெட்ரோல் குடிப்பதை இந்த குரங்கு வாடிக்கையாக கொண்டுள்ளது என பானிபட் பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் கௌரவ் லீகா தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் மதுவிற்கு அடிமையாவதை போன்று இந்த குரங்கு பெட்ரோலிற்கு அடிமையாகியுள்ளது. யார் வாழைப்பழம் கொடுத்தாலும் இந்த குரங்கு அதனை உண்ணாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹரியானாவின் பானிபட் பகுதியில் பெட்ரோல் குடிக்கும் குரங்கு வீடியோவினை கீழே காணலாம்..,

 

Share This Post

Post Comment