பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மஹிந்தவுக்கு ஆதரவு

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாகவும், எனினும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார்.

ஏற்பட்டுள்ள நிலமை காரணமாக நாடு பாரிய நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

தற்போது முறையான பிரதமர் இன்மையால் இன்று அரச அலுவலகங்கள் சரியான முறையில் இயங்குவதில்லை என்று கூறியுள்ள குமார வெல்கம, ஒரு பிரதமர், பிரதமர் அலுவலகத்திலும் மற்றொரு பிரதமர் அலரி மாளிகையிலும் இருப்பதால் நாட்டிற்கு எவ்வித பயனும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதைவிட சிறந்த முறையில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொண்டிருக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

அனைத்து செயற்பாடுகளும் அரசியலமைப்புக்கு உட்பட்டு இடம்பெற வேண்டும் என்றும், இன்று உடை அணிந்து கொண்டு பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாது என்றும், பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார்.






Related News

  • எந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை
  • ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்
  • ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி
  • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
  • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
  • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *