குமார சங்ககராவின் உலக சாதனையை சமன் செய்தார் டோனி

sdsd

India-vs-Sri-Lanka-இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் மகேந்திர சிங் டோனி. தனது சிறப்பான விக்கெட் கீப்பிங் பணியால் உலகளவில் பெயர் பெற்றவர். குறிப்பாக ஸ்டம்பிங் மற்றும் ரன்அவுட் செய்வதில் மிக வல்லவர்.

தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின் முடிவில் டோனி 298 போட்டிகளில் 98 பேரை ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கியதன் மூலம் உலகளவில் அதிக ஸ்டம்பிங் செய்த 2-வது விக்கெட் கீப்பர் என்ற சாதனைப் படைத்திருந்தார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககரா 404 ஒருநாள் போட்டிகளில் 99 ஸ்டம்பிங் செய்து முதல் இடத்தில் இருந்தார்.

இன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இலங்கை தொடக்க வீரர் குணதிலகா 19 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் அவுட் ஆனார். குணதிலகாவை ஸ்டம்பிங் மூலம் டோனி வெளியேற்றினார்.

இதன்மூலம் 99 ஸ்டம்பிங் செய்து சங்ககராவுடன் உலக சாதனையை சமன் செய்துள்ளார் டோனி. இன்னும் ஒரு ஸ்டம்பிங் செய்தால் உலக சாதனைப் படைப்பார்.

 

Share This Post

Post Comment