ஒரே சூழில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்; பொத்துவிலில் சம்பவம்

Facebook Cover V02

baby-born1மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பிரசவித்துள்ளார்.

இன்று அதிகாலை பொத்துவிலைச் சேர்ந்த தாயொருவர் சத்திர சிகிச்சை மூலம் குறித்த நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ். இப்ராலெப்பை தெரிவித்தார்.

பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏற்றம் வீதியை சேர்ந்த ஐ.விஜிதகுமாரி என்னும் 35 வயதுடைய பெண்ணே இந்த நான்கு குழந்தைகளை பிரவித்துள்ளார்.

குழந்தைகள் நிறை குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக குழந்தை நல வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகபபேற்று வைத்திய நிபுணர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்களின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக குறித்த குழந்தைகள் பாதுகாப்பான முறையில் சத்திர சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

baby-born

Share This Post

Post Comment