பாடகி பியோன்ஸ் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்!

Thermo-Care-Heating

Beyonceஅமெரிக்காவின் பிரபல பாடகியான பியோன்ஸ் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ராப் இசை கலைஞர் மற்றும் இசை ஆல்பங்களை தயாரிப்பவரான ஜெ இசட் மற்றும் பியோன்ஸ் தம்பதியினருக்கு ஏற்கனவே ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

பியோன்ஸ் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளின் பாலினம், பிறந்த தேதி, மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. முன்னதாக பியோன்ஸ் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பிப்ரவரி மாதம் வெளியிட்டார்.

இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்ட புகைப்படம் 24 மணி நேரத்தில் 80 லட்சம் பேர் லைக் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் குறைந்த நேரத்தில் அதிகம் பேர் விரும்பிய புகைப்படமானது.

இசை உலகின் மிக உயரிய கிராமி விருதுக்கு அதிகம் முறை பரிந்துரைக்கப்பட்ட ஒரே பாடகி பியோன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment