ரஷிய தாக்குதலில் 25 குழந்தைகள் பலி

ekuruvi-aiya8-X3

rshiyaசிரியா நாட்டில் ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக ரஷிய போர் விமானங்கள் அல்குரியா நகரில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. இதில் 25 பேர் குழந்தைகள் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

உள்நாட்டு போர் தீவிரமாக நடந்து வரும் சிரியா நாட்டில் ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக ரஷிய போர் விமானங்கள் 2 நாட்களுக்கு முன்பு டெய்ர் அல்-சோர் மாகாணத்தில் உள்ள அல்குரியா நகரில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. இதில் ஐ.எஸ். இயக்கத்தினர் 47 பேர் கொல்லப்பட்டதாக சிரியா அறிவித்தது. பலியானோரில் 25 பேர் குழந்தைகள் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இது குறித்த தகவலை, சிரியாவில் உள்ள தனது உள்ளூர் முகமைகளுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் முகமையான `யுனிசெப்’ உறுதி செய்து உள்ளது. இடிபாடுகளை அகற்றியபோது குழந்தைகளின் உடல்கள் கிடைத்தன. மசூதியின் வழிபாட்டு நேரத்திலும் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டதால் இந்த உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக யுனிசெப் குற்றம்சாட்டி இருக்கிறது.

Share This Post

Post Comment