இந்தியாவில் 97 மில்லியன் குழந்தைகள் எடைக்குறைவுடன் உள்ளனர்!

Thermo-Care-Heating

India-had-97-million-underweight-childrenபிரபல மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 97 மில்லியன் குழந்தைகள் எடைக்குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 97 மில்லியன் குழந்தைகள் உடல் எடைக்குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி நடத்திய இந்த கணக்கெடுப்பில் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமான குழந்தைகள் எடைக்குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். உணவு முறைகளில் ஏற்பட்ட மாறுபாடு இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அதிக அளவில் உள்ளது. இதனால் அவர்களின் உடல் எடை குறைவாக உள்ளது.

இதில் 22.7 சதவீதம் ஆண் குழந்தைகள் மற்றும் 22.7 சதவீதம் பேர் பெண் குழந்தைகள் ஆவர். உலக அளவில் 192 மில்லியன் குழந்தைகள் எடைக்குறைவாக உள்ளனர். இந்த நிலைமை நீடித்தால் 2022-ம் ஆண்டில் மேலும் அதிக அளவிலான குழந்தைகள் எடைக் குறைபாட்டால் பாதிக்கப்படுவர் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதனால் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும். குறிப்பாக ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு கொடுக்கப்பட வேண்டும். இதற்கென தனி விதிமுறைகளை அமைத்து குழந்தைகளுக்கு சுகாதாரமற்ற உணவு கொடுக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என லண்டன் கல்லூரி பேராசிரியர் மஜ்ஜித் இசாட்டி தெரிவித்தார்.

ideal-image

Share This Post

Post Comment