அதிபர் தேர்தல்: ட்ரம்ப்புக்கு குடியரசுக் கட்சி நியமனம் உறுதி

ekuruvi-aiya8-X3

ted_cruz_512x288அமெரிக்க அதிபர் தேர்தலில், பிரதான கட்சிகளின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும், ப்ரைமரி தேர்தல்களில், குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளரான, டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட டெட் க்ரூஸ் போட்டியிலிருந்து விலகிவிட்டார்.

இதனையடுத்து, குடியரசுக்கட்சியின் அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் நியமனத்தை டொனால்ட் ட்ரம்ப் பெறுவது நிச்சயமாகிவிட்டது.

இந்தியானா மாநிலத்தில் நடந்த குடியரசுக் கட்சி பிரைமரி தேர்தலில் டெட் க்ரூஸ் தோற்றதை அடுத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தன்னால் வெற்றி பெறக்கூடிய ஒரு பாதையை பார்க்கமுடியவில்லை என்று டெட் க்ரூஸ் கூறினார்.

வெற்றி பெற்ற வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப் பேரணி ஒன்றில் பேசுகையில், டெட் க்ரூஸைப் பாராட்டி, அவர் ஒரு கடுமையான , புத்திசாலித்தனமான போட்டியாளர் என்று வர்ணித்தார்.

bernie_sanders_640x360ஆனால் அதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் இருவரும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டனர்.

நவம்பரில் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் வெல்வதுதான் இனி தன்னுடைய நோக்கம் என்றார் ட்ரம்ப்.
இந்தியானாவில் வென்றார் சேண்டர்ஸ்

இதே இந்தியானா மாநிலத்தில் நடந்த ஜனநாயகக் கட்சிக்கான பிரைமரி தேர்தலில் பெர்னி சேண்டர்ஸ் அவரை எதிர்த்து போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனை மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆனாலும், போட்டியில், ஹிலாரி கிளிண்டன் தொடர்ந்து வகித்துவரும் முன்னணி நிலையை, இந்தத் தோல்வி பாதிக்காது. ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதில் ஹிலாரி தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.

Share This Post

Post Comment