யாழில் குடிநீர் பிரச்சனை, கொழும்பிலிருந்தே குடிநீர் கொண்டுவருகிறேன்!

ekuruvi-aiya8-X3

rejinodkureயாழில் குடிநீர்ப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் தான் தனக்குத் தேவையான நீரை கொழும்பிலிருந்தே கொண்டுவருவதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சீரான கழிவகற்றும் கட்டமைப்பு இன்மையால் குடிநீர் மாசடைந்திருப் பதாகவும், இதனால் சிறுநீரகநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் திணைக்களத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

யுத்தத்தினால் தமிழ் மக்கள் அனுபவித்ததைப்போன்று வேறு எவரும் அனுபவிக்கவில்லை. இன்னொரு யுத்தத்தை அவர்கள் ஒருபோதும் கோரவில்லை.

உலகத்தில் தீர்க்கதரிசிகள் இருக்கின்றார்கள். இயேசு கிறிஸ்து, புத்தர் போன்றவர்களின் வரவுகள் பற்றி பேசியவர்களைப்போன்று, உலக அழிவைப் பற்றி தீர்க்கதரிசனம் கூறுபவர்களும் உள்ளனர்.

அதேபோன்றுதான் அரசியலில் எதிர்காலத்தில் ஏற்படும் சம்பவங்கள் குறித்தும் கருத்துரைக்கும் தீர்க்கதரிசிகளும் உள்ளனர். பரபரப்பு அரசியல் தொடர்பில் கருத்து வெளியிட்டு பயத்தை ஏற்படுத்துவதன் மூலம் இவ்வாறானவர்கள் தங்களுக்கு தேவையான குழுக்களை ஏற்படுத்திக்கொள்வார்கள்.

இவர்கள் மக்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணி இலாபத்தை பெற முயற்சிப்பார்கள். ஆனால் உண்மையிலேயே தமிழ் மக்கள் மிகவும் கஷ்டத்தை அனுபவிக்கின்றார்கள்.

பொருளாதார நெருக்கடி, குடிநீர்ப் பிரச்சனை, இயற்கைச் சீரழிவுகள் போன்ற பல்வேறு காரணிகளால் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.

நான் வடக்கு மாகாண ஆளுநராக இருந்தும் கொழும்பிலிருந்தே குடிநீர் கொண்டுவருகின்றேன். அங்குள்ள நீரைக் குடித்தால் சிறுநீரக நோய் ஏற்படும். ஏனென்றால் அங்குள்ளநீர் மாசடைந்துள்ளது.

அது மட்டுமன்றி குடாநாட்டு மலசல கழிவு விநியோகச் செயற்பாடு சீரானதாக இல்லை. இதனாலேயே குடிநீர் மாசடைந்துள்ளது.

எனவே அவர்களுக்கு செய்யவேண்டியவற்றை விரைவாகச் செய்யவேண்டியதே என்னுடைய எதிர்பார்ப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment