குடியுரிமையைப் பறிக்கும் திட்டத்தை பிரெஞ்ச் அதிபர் கைவிட்டுள்ளார்

Thermo-Care-Heating

hollandeபயங்கரவாதச் செயல்பாடுகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் குடியுரிமையை பறிக்கும் திட்டம் கைவிடப்படுவதாக பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலா(ந்) அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் பாரிஸில் இடம்பெற்றத் தாக்குதல்களை அடுத்து, குடியுரிமையை பறிக்க அரசியல் சாசனத்தில் மாறுதலைக் கொண்டுவரும் திட்டம் முன்வைக்கப்பட்டது.

ஆனால் அத்திட்டமானது அவரது சொந்தக் கட்சியான சோஷலிஸ கட்சிக்குள் ஆழமான பிளவுகளை ஏற்படுத்தி, நீதியமைச்சர் பதவி விலகவும் காரணமாக அமைந்தது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், குடியுரிமையை பறிக்கும் திட்டம் கைவிடப்படுவதாக ஒலா(ந்) அறிவித்துள்ளார்.

யதார்த்த ரீதியில் மிக்குறைந்த தாக்கதத்தையே ஏற்படுத்தியிருக்கக் கூடிய அந்த மசோதா மீது கசப்பான, பலனை ஏற்படுத்தாத அரசியல் மோதல் ஏற்பட்டது என பாரிஸிலுள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment