விடுப்பில் செல்லச் சொன்ன அன்றே முக்கிய கோவைகளை சத்தியலிங்கம் எடுத்துச்சென்றுவிட்டார்!

Thermo-Care-Heating

vik557777தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் செல்லுமாறு நான் பணித்த அன்றே சுகாதார அமைச்சர் அலுவலகத்திற்குச் சென்று முக்கிய கோவைகளை எடுத்துச் சென்றுவிட்டார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே தொடரும் விசாரணைகளை குழப்பியடிக்கமாட்டோமென்ற உத்தரவாதத்தினை ஏற்காவிட்டால் விசாரணையை நீதியான முறையில் முன்னெடுத்துச் செல்லமுடியாது. ஆகவே விசாரணையை குழப்பியடிக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெற்றுத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தேன்.

அதற்கு இரா.சம்பந்தன் அவர்கள் உத்தரவாதம் தரமுடியாது எனப் பதிலளித்துள்ளார். அவரின் கடிதத்திற்கு பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்தபின்னர் பதில் கடிதம் எழுதவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

ideal-image

Share This Post

Post Comment