கொத்துக்குண்டுகள் பயன்பாட்டினால் அவலநிலையில் திண்டாடும் மக்கள் பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு

Facebook Cover V02

koththukunduஇறுதி யுத்­தத்தில் கொத்துக் குண்­டுகள், இர­சாயனப்பொருட்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டதன் கார­ண­மாக இன்னும் எமது மக்கள் துன்­பப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­ன்­றார்கள் என பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதித் தலை­வரும் தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்க­ல­நாதன் நேற்று சபையில் தெரி­வித்தார்.

தற்­போது பிறக்கும் குழந்­தைகள் கூட அதன்பாதிப்­புக்­குள்­ளா­வ­தாக சுட்­டிக்­காட்­டிய அவர் உடலில் குண்டு துகள்­களை சுமந்து கொண்­டி­ருக்கும் அனை­வ­ரையும் பாது­காப்­ப­தற்கு அர­சாங்கம் உடன் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற கால­நிலை மாற்றம் தொடர்­பான பரீஸ் உடன்­ப­டிக்கை ஒப்­பு­த­ல­ளித்தல் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்இ கடந்த காலத்தில் நடை­பெற்ற யுத்­தத்தின் கார­ண­மாக எமது மக்கள் பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர்.

மக்­களின் சொத்­துக்கள், உயிர்கள் என்­பன இழக்­கப்­பட்­டமை ஒரு புற­மி­ருக்­கையில் இயற்கை வளங்­களும் முற்­றாக சிதை­வ­டைந்­துள்­ளன.

இறுதி யுத்­தத்தின் போது கொத்துக் குண்­டுகள், இர­சா­யனப் பொருட்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதனால் எமது மக்கள் இன்றும் துன்­பங்­க­ளுக்கு உள்­ளாகி வரு­கின்­றனர்.

அதன் விளை­வுகள் தற்­போது பிர­தி­ப­லிக்­கின்­றன. தற்­போது பிறக்­கின்ற குழந்­தைகள் கூட பாதிப்­புக்­குள்­ளா­கிய நிலையில் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றி­ருக்­கின்ற நிலையில் யுத்தம் நிறை­வ­டைந்து 7 வரு­டங்­க­ளா­கின்­றன.

இந்த கால பகு­தியில் பல பாட­சாலை மாண­வர்கள், இளைஞர், யுவ­திகள், பொது­மக்கள் அவ்­வப்­போது மயங்கி விழும் நிலைகள் காணப்­பட்­டுள்­ளன. இவர்கள் உடலில் குண்­டுத்­து­கல்­க­ளுடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­க­ளுக்­கு­ரிய மருத்­துவச் சிகிச்சை வழங்­கப்­பட வேண்டும்.

இவர்­களை பாது­காப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கையை அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்டும். நல்­லி­ணக்கம் தொடர்­பாக கவனம் செலுத்தும் அர­சாங்கம் உட­ன­டி­யாக இவ்­வி­டயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என இச்­ச­பையில் வலி­யு­றுத்­து­கின்றேன்.

அதே­நேரம் இயற்கை வளங்கள் நிறைந்த வன்­னிப்­பி­ர­தேசம் யுத்­தத்தின் கார­ண­மாக முற்­றாக அழி­வ­டைந்­துள்­ளது. இதனால் வெப்ப நிலை அப்­பி­ர­தே­சத்தில் அதி­க­ரித்­துள்­ளது.

இதன் கார­ண­மாக பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு பொது­மக்கள் முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அதே­போன்று இயற்கை அனர்த்­தங்­களும் அண்மைக் கால­மாக அதி­க­ரித்­துள்­ளன.

விசே­ட­மாக மன்னார், முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் கட­ல­ரிப்பு அதி­க­ரித்­துள்­ளது. மறு­புறம் நீர் நிலை­களில் நீர் வற்­று­வ­தனால் முனை­ப்பான விவ­சாய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாத நிலை­மைகள் ஏற்­பட்­டுள்­ளன.

ஆகவே சூழல் சம நிலையை பேணு­வ­தற்­கு­ரிய செயற்­றிட்­டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

இதேபோன்ற நிலைமைகள் தான் கிழக்கு மாகாணத்திலும் காணப்படுகின்றன. ஆகவே குறித்த பரீஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் மூலம் வினைத்திறன் மிக்க வகையில் எதிர்காலத்தில் இலங்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

Share This Post

Post Comment