கொரில்லா படத்தில் ஜீவாவுடன் நடிக்கும் சிம்பன்சி

Thermo-Care-Heating

jeeva-with-gorillaநடிகர் ஜீவா நடிக்கும் 29வது படத்திற்கு “கொரில்லா” என பெயரிட்டுள்ளனர். ஜீவா ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்க, டான் சாண்டி இயக்குகிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார்.

காமெடியுடன் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் ஜீவாவுடன், சிம்பன்சி குரங்கு ஒன்றும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறது. இதற்காக தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற விலங்குகள் பயிற்சி மையமான ‘சாமுட்’-ல் இருந்து சிம்பன்சி வரவழைக்கப்பட இருக்கிறது.

இப்படத்திற்கு விக்ரம் வேதா புகழ் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். அடுத்தமாதம் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது

ideal-image

Share This Post

Post Comment