மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!

ekuruvi-aiya8-X3

வடக்குக் கிழக்கு மக்களை அச்சுறுத்தும் மூன்று பிரச்சனைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பிரதான பேருந்துத் தரிப்பிடத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் ஒழுங்குபடுத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இரும்பினால் பொருத்தப்படும் அறுபத்தையாயிரம் வீட்டினை நிறுத்தி கல்வீட்டுத் திட்டம் வழங்கவேண்டுமெனவும், சம்பூர் அனல் மின் நிலையத்தை நிறுத்தி மின்சாரம் பெறுவதற்கு மாற்று வழியொன்றினைத் தெரிவுசெய்யவேண்டுமெனவும், சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு ஒயிலுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டுமெனவும் அதற்குரிய நிவாரணமும் வழங்கப்படவேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், இதன்போது சம்பந்தன் ஐயாவே சம்பூருக்கு என்ன தீர்வு? மாவை ஐயாவே சுன்னாகத்திற்கு தீர்வு என்ன? பொருத்து வீடுகள் எமக்கு வேண்டாம்; பொருத்தமான கல்வீடுகளே எமக்குத் தேவை. பாதிக்கப்பட்டோரை ஏமாற்றாதே? தாமதமின்றி தரமான வீடுகளைக் கொடு; மாசடைந்த நீருக்கு மத்திய அரசே தீர்வென்ன? போன்ற கோஷங்களை எழுப்பியவாறு பாதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3088089Protest 30820089Protest 30882008Protest 30882009Protest 30882089Protest 38820089Protest

Share This Post

Post Comment