கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு!

Facebook Cover V02

edappadi-palanisamy-published-in-Korean-language-thirukkuralஜெயலலிதாவின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் கொரிய மொழியில், மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நெல்லை மாவட்டம், வி.கே.புதூரில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டிடத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தவாறு, காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்துவைத்தார்.

மேலும், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டிலும், அரியலூர் மாவட்டம், செந்துறையில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 சார் கருவூலஅலுவலக கட்டிடங்களையும், சென்னை அரசு மைய அச்சகத்திற்கு ரூ.21 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும், பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2 கோடியே 62 லட்சம் செலவில் 12,280 சதுர மீட்டர் பரப்பளவில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நினைவு பூங்காவையும், சென்னை அரசு மைய அச்சகத்தில், ரூ.60 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள சிறப்பு புத்தகம் கட்டும் எந்திர சேவையையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஜெயலலிதாவின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் கொரிய மொழியில் மொழிபெயர்த்து அச்சிடப்பட்ட திருக்குறள் நூலை, எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.

அந்த நூலின் முதல் படியை சென்னையில் உள்ள தென் கொரிய தூதரகத்தின் தூதர் ஹங் டே கிம் பெற்றுக்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் ரூ.9 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளம், திருவெற்றியூர், சோழந்தூர் மற்றும் ஏர்வாடி ஆகிய இடங்களில் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 கால்நடை மருந்தகக் கட்டிடங்கள், ராமநாதபுரத்தில் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலைய கட்டிடம் என மொத்தம் ரூ.36 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டிலான கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத்துறை கட்டிடங்களையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment