இந்திய இராணுவத்துக்கு அஞ்சலி செலுத்த கோப்பாய் விரைகிறது இந்திய இராணுவ அதிகாரிகள் குழு!

01இந்த வார இறுதியில் இலங்கைக்குப் பயணம் செய்யும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழுவொன்று, விடுதலைப்புலிகளுடனான தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு கோப்பாயில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு வருகை தரவுள்ளனர்.

இதன் காரணமாக கைவிடப்பட்டிருந்த குறித்த நினைவுத் தூபி தற்போது துப்புரவாக்கப்பட்டு வருகின்றது.

1987ஆம் ஆண்டு அமைதி காக்கவென வந்த இந்திய இராணுவம் அப்பாவித் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்தது.

இந்தக் காலப் பகுதியிலேயே இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தில் 1000 இற்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர்.

அவ்­வாறு கொல்­லப்­பட்ட இந்­திய இரா­ணு­வத்­தி­னர் சில­ருக்கு கல் வி­யங்­காடு இராச பாதை­யில் பிடா­ரித் தோட்­டம் பகு­தி­யில் சிறிய நினை­வுத் தூபி ஒன்று கட்­டப்­பட்­டுள்­ளது. தனி­யா­ருக்­குச் சொந்­த­மான காணி ஒன்­றி­லேயே அனு­மதி இன்றி அந்­தத் தூபி அமைக்­கப்­பட்­டுள்ளது.

இப்­போது அந்­தத் தூபி­யைத் தேடிக் கண்­ட­றிந்­துள்ள இந்­திய இராணு­வத்­தி­னர் அதில் அஞ்­சலி செலுத்­த­வுள்­ள­னர். இதற்­காக அந்த இடத்­தைத் துப்­பு­ரவு செய்யும் ஏற்­பா­டு­கள் இலங்கை இரா­ணு­வத்தி­ன­ரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. 17 ஆண்­டு­க­ளின் பின்­னர் அந்­தத் தூபி­யைச் சுற்றி பகுதி துப்­பு­ரவு செய்­யப்­ப­டு­கி­றது.

நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு வரவுள்ள இந்திய இராணுவ அதிகாரிகள் 4பேர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இத்தூபிக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

வகை தொகையின்றி அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை, போரினால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவுகூர்வதற்கு மறுக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை மாத்திரமே நினைவுகூரப்பட்டு வருகின்றது. மற்றைய படுகொலைகள் எவையும்நினைவுகூரப்படுவதில்லையென்பது கவலைக்குரிய விடயமே.


Related News

 • இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில்
 • புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்
 • விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி
 • துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்
 • இரண்டாவது நாளாகவும் CIDயில் ஆஜரான நாலக டி சில்வா
 • கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்
 • மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை
 • நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யலாம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *