தென்கொரியா விமானப்படையுடன் கூட்டு பயிற்சியை தொடங்கியது அமெரிக்கா

Thermo-Care-Heating
US-aircraft-land-as-drills-begin-with-South-Koreaசர்வதேச விதிமுறைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வடகொரியா மீண்டும் ஒரு கண்டம்விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த முறை வடகொரியாவின் ஏவுகணை தென்கொரிய வான் எல்லையில் பறந்து, ஜப்பான் கடற்பகுதியில் விழுந்தது.
இதையடுத்து அமெரிக்காவின் எந்த பகுதியையும் தங்களால் தாக்கமுடியும் என வடகொரியா அறிவித்தது. இது கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் தென்கொரியா விமானப்படையினர் இணைந்து கூட்டுப்பயிற்சி நடத்த திட்டமிட்டனர். அதன்படி இன்று கூட்டுப்பயிற்சி தொடங்கியது. விஜலண்ட் ஏஸ் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த கூட்டுப்பயிற்சியின் மூலம் இரு விமானப்படையின் செயல்திறன்கள் மேம்படும் என தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த கூட்டுப்பயிற்சியில் சுமார் 230 ராணுவ விமானங்கள் பங்கேற்றுள்ளன. இந்த பயிற்சிக்காக அமெரிக்கா விமானப்படை 24 மறைந்து தாக்கும் விமானங்களை அனுப்பியுள்ளது. இந்த பயிற்சியில் சுமார் 12 ஆயிரம் ராணுவ வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின்  கூட்டுப்பயிற்சி எந்நேரமும் போர் தொடங்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என வடகொரியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ideal-image

Share This Post

Post Comment