ஜப்பானிய-சிறீலங்காப் படைகள் அடுத்த மாதம் கூட்டுப்பயிற்சி!

ekuruvi-aiya8-X3

japanese-vesssels-colombo-1-1ஜப்பானியக் கடற்படையும், சிறீலங்காவின் கடற்படை, விமானப்படை, கடலோரக் காவற்படைகள் ஒன்றிணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

தேடுதல் மற்றும் மீட்பு ஒத்திகை என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்தக் கூட்டுப்பயிற்சியானது அடுத்தமாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஜப்பானிலிருந்து இரண்டு பி-3சி கடற் கண்காணிப்பு விமானங்கள் கொழும்பு வரவுள்ளன.

சோமாலியாக் கடற்பரப்பில் கடற் கொள்ளையர்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஜப்பான் போர்க்கப்பல்கள் அடிக்கடி சோமாலியா சென்று திரும்பும் வேளையில் கொழும்புத் துறைமுகத்தில் தரித்துநின்றே செல்கின்றன.

ஜப்பான் போர்க்கப்பல்கள் கொழும்பு வரும் சந்தர்ப்பத்தில் சிறீலங்காக் கடற்படையினருடன் பயிற்சியில் ஈடுபடுவதால் இரு நாட்டு கடற்படைகளுக்கிடையிலும் ஒத்துழைப்பு வலுப்படுத்தப் படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக, கடந்த திங்கட்கிழமை சுசுனாமி மற்றும் மகிநாமி ஆகிய இரண்டு ஜப்பானியப் போர்க்கப்பல்கள் கொழும்பு வந்திருந்தன. இது ஜப்பான் போர்க்கப்பல்கள் சிறீலங்காவுக்கு மேற்கொண்ட 58ஆவது பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment