கூட்டமைப்புடன் எவ்வித உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்படவில்லை-சுதந்திரக் கட்சி

ekuruvi-aiya8-X3

SLFP-777eதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வித உடன்படிக்கைகளும் செய்துகொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்றுஇடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவபிரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போது அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்மைப்பும் எவ்வித உடன்படிக்கைகளும் செய்துகொள்ளவில்லை.

எனினும், சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பின் தலைவர் வரவேற்பு தெரிவித்து வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment