கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட காரணம் என்ன? – முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளக்கம்

viknesh655தன்னாட்சி,தாயகம் போன்றகோரிக்கைகளைக் கைவிடத் தயார்; சமஷ்டி முறைசாத்தியம் இல்லைஎன்று கூறிஒருசிலசலுகைகளைமட்டும் பெறும் வகையில் நடந்துகொள்வதால்த்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவுஏற்படப் பார்க்கின்றது.

அதாவதுநாமாகவேவலிந்துதயாரித்ததேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கத்தைதான்தோன்றித்தனமாகக் கைவிடஎமதுதலைமைகள் முன்வந்தமையேபிளவுஏற்படஏதுவாக இருக்கின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரத்துக்கொருகேள்வி என்று வடக்கு மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பி வருகிறார். இதன்படி இந்தவாரம் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இன்றையதமிழ்த் தலைமைத்துவம் தோற்றுவிட்டோம் என்றமனப்பாங்கில் பௌத்தத்துக்குமுதலிடம் கொடுக்கநாம் தயார்; ஒற்றையாட்சியின் கீழ் சிங்களப் பேரினவாதத்துக்குதொடர்ந்து இடம் கொடுக்கநாம் தயார்;வடகிழக்கை இணைக்காதுவிடநாம் தயார்;தன்னாட்சி,தாயகம் போன்றகோரிக்கைகளைக் கைவிடத் தயார்; சமஷ்டி முறைசாத்தியம் இல்லைஎன்று கூறிஒருசிலசலுகைகளைமட்டும் பெறும் வகையில் நடந்துகொள்வதால்த்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவுஏற்படப் பார்க்கின்றது. அதாவதுநாமாகவேவலிந்துதயாரித்ததேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கத்தைதான்தோன்றித்தனமாகக் கைவிடஎமதுதலைமைகள் முன்வந்தமையேபிளவுஏற்படஏதுவாக இருக்கின்றது.

பெரும்பான்மையானதமிழ்க் கட்சிகள் யாவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தைஒட்டியகருத்தையேதாம் கொண்டுள்ளனர்.ஆகவேஅந்தக் கொள்கைகளில் மாற்றமேதும் இல்லைஎன்றுதமிழ்த் தலைமைத்துவத்தால் உறுதியுடனும் நேர்மையுடனும் கூறமுடிந்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புதொடர்ந்தும் வலுவானஒருஅரசியல்க்கட்சியாகமுன்னேறமுடியும்.

அவ்வாறில்லாமல் குறைந்ததைப் பெறுவதேஉசிதம் என்றுஎமதுதொடர் அடிப்படைக் கருத்துக்களைஉதாசீனம் செய்தால் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கமுடியாது. ஆனால் அவ்வாறானகுறைந்தபட்சதீர்வுகளுக்கு இவ்வளவுதியாகங்களின் பின்னரும் எம்மவர்கள்உள்ளுராட்சித் தேர்தல்களின் போதுசம்மதம் தெரிவிப்பார்களானால் அரசாங்கம் தான் நினைத்தவாறுசிலசலுகைகளைஎம் மீதுதிணித்துவிட்டுஎமதுநீண்டகாலஅரசியல் பிரச்சனையைமழுங்கடிக்கஅதுஅனுசரணையாகஅமையும். அத்துடன் வடமாகாணமும் கிழக்குமாகாணம் போல் பறிபோய்விடும். என அவர் தெரிவித்துள்ளார்.


Related News

 • ஈழத்தமிழர்களின் பொதுவாக்கெடுப்புக்கான இலச்சினையை வரைய ஒரு வாய்ப்பு !!
 • சுதந்திர தினத்தை முன்னிட்டு 30 இந்திய சிறைக்கைதிகளை விடுவித்தது பாகிஸ்தான்
 • மாநிலங்களவையில் ‘முத்தலாக்’ மசோதா தாக்கல் செய்யப்படாது, அடுத்த பாராளுமன்ற தொடருக்கு ஒத்திவைப்பு
 • 1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 • வெள்ளத்தில் மூழ்கிய ரொறன்ரோ – மீட்பு பணிகள் தீவிரம்
 • அமெரிக்காவின் பொருளாதார தடை ஏற்றுக்கொள்ள முடியாதது – ரஷ்யா கருத்து
 • கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – உயிரைக் காப்பாற்ற போராடும் டாக்டர்கள்
 • நஃப்டா பேச்சுவார்த்தைக்குத் தயார் – கனேடிய பிரதமர்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *