கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் வரி ஏய்ப்புச் செய்து சொகுசு வாகனம் கொள்வனவு செய்தமை கண்டுபிடிப்பு!

ekuruvi-aiya8-X3

tna-300x200தீர்வை வரியின்றி கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன

இந்தக் கொள்வனவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவும் சம்பந்தப்பட்டுள்ளார்.

அத்துடன், சில மாதங்களுக்கு முன்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குச் சொந்தக்காரருமான வர்த்தகர் ஒருவர் 1750ரூபா மட்டும் வரியாகச் செலுத்தி சொகுசு வாகனத்தைக் கொள்வனவு செய்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டிருந்தது.

அரசாங்கத்தின் வரிக்கொள்கையை மீறி வாகனங்கள் கொள்வனவு செய்யப்படுவதால் ஆண்டொன்றுக்கு 40 மில்லியன் ரூபா இழக்கப்படுவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சட்டத்தரணி கொடித்துவக்கு கருத்துத் தெரிவிக்கையில், தீர்வை வரியின்றி நாட்டுக்குள் கொண்டுவரப்படும் அனுமதியில் இடம்பெறும் வரி மோசடிகளுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென தான் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் முறைப்படி இவற்றை மேற்கொள்வதால் அரசாங்கத்திற்கு ஏற்படுகின்ற வருமான இழப்புத் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தலையீடு செய்யமுடியாது என அவர் தனக்கு எழுத்து மூலமாகத் தெரிவித்தார் எனத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், ஊழல் சட்டத்தின் நான்காவது பிரிவின்கீழ் நம்பகரமானதும், முறையானதுமான விசாரணையை மேற்கொள்ள லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அதிகாரமிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி, தமது பெயரில் வாகனங்களைக் கொள்வனவு செய்து அவற்றை விற்பனை செய்வது ஊழல் சடத்தின் 70ஆவது பிரிவில் இது ஒரு பாரிய குற்றமெனவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு விற்பனை செய்வதாயின் முழுமையான வரி செலுத்தப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment