தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம்

ekuruvi-aiya8-X3

tamilnduதமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று(4) காலை 9 மணிக்கு கூடுகிறது.

அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவை அடுத்து, டிசம்பர் 6-ம்திகதி நள்ளிரவு ஒரு மணி அளவில், ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார்.

அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர். பன்னீர் செல்வம் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக டிசம்பர் 10-ம் திகதி முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பலமுறை அமைச்சரவை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு கூடுகிறது. முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வறட்சி, விவசாயிகள் மரணம், பட்ஜெட் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share This Post

Post Comment