கூடங்குளம் அணுமின்நிலையம் தொடர்பாக இந்தியா, ரஷியா 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

ekuruvi-aiya8-X3

Kudankulam-Nuclear-Plantபிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் முதல் வாரம் ரஷியா சென்றிருந்தார். அப்போது அவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளை ரஷியா உதவியுடன் கட்டுவது என்று அப்போது ஒப்பந்தம் போடப்பட்டது. பல தடைகளை கடந்து இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த அணு உலைகளுக்கான 3 ஒப்பந்தங்கள், நேற்று முன்தினம் டெல்லியில் கையெழுத்தானது.

இதுபற்றி ரஷியாவின் ஜே.எஸ்.சி. ஆட்டம்ஸ்டிராய் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆன்ட்ரே லெபேதெவ் கூறும்போது, “கூடங்குளம் அணுமின்நிலையத்தின் 5-வது மற்றும் 6-வது அணு உலையின் கட்டுமான திட்ட நடைமுறை வடிவமைப்பு தொடங்கி உள்ளது. 3-வது கட்டப்பணிகளை நிறைவு செய்வதற்கான ரஷிய சாதனங்கள் கொள்முதல் நடைமுறைகளும் தொடங்கி உள்ளன” என்று குறிப்பிட்டார்.

Share This Post

Post Comment