கொங்கோவில் இடம்பெற்ற போராட்டத்தில் 17 பேர் பலி

Facebook Cover V02

Congo-APகொங்கோவில் இடம்பெற்ற போராட்டத்தில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஜோசப் காலிபாவை பதவி விலகுமாறு கோரி இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் மூன்று பேர் காவல்துறை உத்தியோகத்தர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும் உள்துறை அமைச்சர் Evariste Boshab தெரிவித்துள்ள நிலையில் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

போராட்டத்தின் நிறைவில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வீதிகளில் கிடப்பதனை காண முடிந்தது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நவம்பர் மாதம் கொங்கோவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ள போதும் அரசாங்கம் அதனை காலம் தாழ்த்தத் திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி காலிபா, இரண்டு தடவைகள் ஆட்சி நடத்தியதன் பின்னரும் தேர்தலை காலம் தாழ்த்தி ஆட்சியில் நீடிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

Share This Post

Post Comment