கொள்ளி வைக்க நேரமின்றி போர் குண்டுச் சூரியன்

akka

கொள்ளி வைக்க நேரமின்றி …
போர் குண்டுச் சூரியன்…!!!

ஓர் மனிதன்
ஓர் வீரன்
ஓர் குழந்தை
ஓர் விலங்கு

ஒவ்வொன்றாய்
ஒருமித்த நீடிப்பாய்
மனித இனமொன்று
மரணித்த நாளிது

முள்ளிவாய்க்கால் திடலில்
கொள்ளி வைக்க நேரமின்றி
போர் குண்டுச் சூரியன்
பொழிந்து கொட்டிய நாளிது

இருப்பைப் பணயம் வைத்து
விரைந்துவர யாருமில்லை

காத்திருந்து காத்திருந்து
களைத்துச் சோர்வடைந்து
மெதுவாகவும் விரைவாகவும்
இனமொன்று சிதைவுற்றது

உள்ளங்கால் தொட்டு
உச்சந் தலை வரை
ஊறி நிற்கிறது வலி

செத்த வாடை மறவாமல்
சீறும் அழுகை நிறுத்தாமல்
பத்தி எரிகிறது பழி

மரணம் தின்ற வன்னியும்
சிதறிப் பரவிய சதைகளும்
கதறித் துடித்த அலறலும்
மறதி வெள்ளம் ஆகுமா?

எரிமலைப் பாறைக்குள்
எப்படிப் பூ பூக்கும்

அறுவடை வயலில்
அழுது புலம்பாமல்
எப்படிச் சாய்ந்தோம்
என்பதை ஓதுங்கள்

வழிதவறிய மந்தைகளின்
பிரார்த்தனைக் கூடங்கள்
பெருகப் பெருக
கொப்பளிக்கிறது கோபம்

அடிமைப்படுதல்
சிலருக்கு முடியும்
நசுங்கும் குரல்வளை
சிலருக்கு பாடும்

நிறம்மாறும் இலைகள்
சருகாக மாறட்டும்

நடைபாதை ஒன்றில்
தடைபோட்டு வைத்தால்
பயணங்கள் முடிவதில்லை
தடயங்கள் அழிவதில்லை

அறுந்த வீணையின் நரம்புகள்
வானில் தங்கி அழுகின்றன

வருங்காலம் தடயம் தேடும்
வார்த்தைகளைச் சுருக்காதீர்கள்

அலைச்சுழியின் மோதலில்
அரண்மனை மதில் உடைந்த
ஓர் அழகான தோட்டம்
இன்று தனியாக உள்ளது

விதைகள் விழித்தெழுந்து
புது மலர்கள் பூக்க
இரவில்கூட சூரியன் உதிக்கட்டும்

– சௌந்தரி கணேசன்


Related News

 • எந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை
 • ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்
 • ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி
 • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
 • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
 • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
 • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
 • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *