யுத்தத்தில் 150,000 பேர் கொல்லப்பட்டனர் – சம்பந்தன்!

ekuruvi-aiya8-X3

sampathan-759வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் 150,000 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான தி ஐலன்ட் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கெதிரான மாநாட்டில் இரா.சம்பந்தன் உரையாற்றியிருந்தார். அந்த உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக தி ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 50 வீதமான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச மனித உரிமை சட்டங்கள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை ஆயுதமேந்திப் போராடிய குழு மற்றும் இலங்கை அரசாங்கம் என இருதரப்பினரும் மீறியுள்ளதாக 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

மேலும் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, நிலைமாற்று நீதி நடைமுறைகள், காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், தடுத்து வைக்கப்பட்டிருப்போர் மற்றும் இந்த முரண்பாட்டிற்கு நியாயமானதும், ஏற்றுக் கொள்ளத் தக்கதுமான ஓர் அரசியல் தீர்வைக் கொண்டுவரக்கூடிய அரசியலமைப்பு ஏற்பாடுகளை வகுத்தல் போன்ற விடயங்களை இந்தத் தீர்மானம் ஆராய்வதாகவும் அவர் புதுடில்லி உரையில் தெரிவித்துள்ளதாகவும் தி ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

download-3

Share This Post

Post Comment